இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பு; 3 ஆண்டுகளில் ரூ 5,000 கோடி முதலீடு: மத்திய அரசு மெகா திட்டம்

By செய்திப்பிரிவு

ட்ரோன் மற்றும் ட்ரோன் பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 120 கோடி வழங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:

ட்ரோன் மற்றும் ட்ரோன் பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 120 கோடி.

ட்ரோன் துறையின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவை விட ஒன்றரை மடங்கு இது அதிகமாகும். இத்துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 5,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டு, ரூ 900 கோடி விற்றுமுதலும், 10,000 வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

2030-க்குள் சர்வதேச ட்ரோன் மையமாக இந்தியாவை உருவாக்குவதே நோக்கமென்றும், இந்த இலக்கை எட்டுவதற்கு தேவையான ஆதரவை தொழில்துறை, சேவை விநியோகம் மற்றும் நுகர்வோருக்கு அமைச்சகம் வழங்கும்.

ட்ரோன் சேவைகள் துறை (செயல்பாடுகள், சரக்கு போக்குவரத்து, தரவு செயல்முறை, போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட பல) அளவில் மிகப்பெரியதாகும். அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 30,000 கோடி எனும் அளவில் இது வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்