கரோனா பரவல்; அடுத்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமானவை: மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் வரவிருக்கும் இரண்டு, மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய கரோனா இரண்டாவது அலை பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அன்றாட பாதிப்பு 4.5 லட்சத்தையும் கடந்து சென்றது. தற்போது படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோவிட் பாதிப்பு அக்டோபர், நவம்பரில் அதிகரிக்கக்கூடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் இதுகுறித்து கூறியதாவது:

நாட்டில் கோவிட் பாதிப்பு அக்டோபர், நவம்பரில் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், 62% க்கும் அதிகமான மக்கள் ஓரளவு தடுப்பூசி போட்டால், நிலைமை முதல் மற்றும் இரண்டாவது அலையிலிருந்து வேறுபடும்.

வரவிருக்கும் இரண்டு, மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் மிக முக்கியமான மாதங்கள் என்று கணிப்புகள் கூறுகின்றன இதுதொடர்பான ஆய்வுகளில் போதுமான தகவல்கள் உள்ளன.

இவை பொதுவாக பண்டிகைகள் மற்றும் காய்ச்சல் ஏற்படும் மாதங்கள் ஆகும். இந்த இரண்டு மாதங்கள் குறித்து நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிறிய அளவில் கரோனா தொற்று உயர்ந்தாலும் கவனிக்கப்பட வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை தேவை. பண்டிகை, விழா காலங்களில் கவனம் தேவை.

சமூக விலகல் மற்றும் தடுப்பூசி மூலம் தொற்றுநோயைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், நிர்வாகம் எதிர்காலத்தில் எந்த உயர்வையும் கையாளும் திறனை அதிகரிக்க வேண்டும். வீட்டு தனிமையில் எப்படி பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்குவது என்பது இப்போது நமக்கு நன்றாகத் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில் ‘‘நாட்டின் கோவிட் நிலைமை கடந்த 11 வாரங்களுக்கான வாராந்திர நேர்மறை விகிதம் 3%க்கும் குறைவாக உள்ளது. கேரளாவின் நிலையும் மேம்பட்டுள்ளது, இருப்பினும் 68% தினசரி பாதிப்புகள் இன்னும் கேரளாவிலிருந்து பதிவாகின்றன.

கேரளாவில் தொற்று குறைந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். மற்ற மாநிலங்களிலும் எதிர்காலத்தில் தொற்று உயர்வதை தவிர்க்கும் நடவடிக்கைகள் தேவை. பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. மக்கள் அடர்த்தி திடீரென அதிகரிப்பது வைரஸ் பரவுவதற்கு உகந்த சூழலை உருவாக்கிவிடும்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்