ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி; செவிலியரின் அர்ப்பணிப்பே காரணம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

By செய்திப்பிரிவு

செவிலியரின் அர்ப்பணிப்பு மற்றும் தொய்வில்லா முயற்சிகளின் காரணமாகவே இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாகி உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

செவிலியர்களுக்கு காணொலி மூலம் தேசிய ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:
செவிலியரது தொடர் முயற்சிகளால் நமது மக்கள் தொகையில் குறிப்பிடத்தகுந்த அளவு மக்களுக்கு நம்மால் தடுப்பு மருந்து அளிக்க முடிந்தது,” என்றார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பல செவிலியர் பலர் உயிரிழந்தனர். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர் கோவிட் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போதே உயிரிழந்தார். இந்த தியாகத்திற்காக நாடு என்றைக்கும் அவருக்கு கடன் பட்டிருக்கும்.

இத்தகைய சேவைகளையும் தியாகங்களையும் பணப் பலன்களால் சமன் செய்ய முடியாது. இருந்த போதிலும், அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் தலா ரூ 50 லட்சம் விரிவான காப்பீட்டை கோவிட்-19-ஐ எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களுக்கான அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

செவிலியர்கள்: வழிகாட்டும் குரல்- எதிர்கால சுகாதார சேவைகளுக்கான லட்சியம்’ என்பது இந்த வருட சர்வதேச செவிலியர் தினத்திற்கான மையக்கருவாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள சுகாதார சேவை அமைப்புகளில் செவிலியர்களின் மைய பங்களிப்புக்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்