மோசமான வானிலையால் நடுக்கடலில் சிக்கிய படகு: 7 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை

By செய்திப்பிரிவு

மோசமான வானிலை காரணமாக டாமன் டையூ வனக் பாராவில் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து ஏழு மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படை மீட்டுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக இந்த படகு செயல் இழந்து, வானக் பாரா கடற்பகுதியில் மாட்டிக்கொண்டது. டாமன் டையூ அரசு உதவி கோரியதும், இந்திய கடலோர காவல்படை உடனடியாக குஜராத் போர்பந்தரிலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் எம்.கே.- 3ஐ மீட்பு பணிக்காக அனுப்பியது.

பலத்த காற்று மற்றும் மழையையும் பொருட்படுத்தாமல், இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விரைவாக அந்த பகுதியை அடைந்தது. வெகு நேர போராட்டத்திற்கு பிறகு அந்த கப்பலில் இருந்து ஏழு மீனவர்களும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இந்திய கடலோர காவல்படை ஜாம்நகரில் பணியாளர்களையும் உபகரணங்களையும் அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்