அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24-ம் தேதி நடைபெறும் குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017-ம்ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது.
முதல்முறையாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கடந்த மார்ச் மாதம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.
கரோனா தடுப்பூசி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டது.
» அலிகரில் ராஜா மகேந்திர சிங் பெயரில் புதிய பல்கலை; பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
» காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்: பிரதமர் இரங்கல்
இந்நிலையில், குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24-ம் தேதி குவாட் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
குவாட் மாநாட்டில் கரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago