முதல்வர் பதவி கிடைக்காததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியுள்ளார்.
குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2016 முதல் அந்த கட்சியின் மூத்த தலைவர் விஜய் ருபானி மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜக எம்எல் ஏக்களின் கூட்டம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மேலிட பொறுப்பாளர் நரேந்திர சிங் தோமர், முதல்வர் பதவிக்கு பூபேந்திர படேலின் பெயரைமுன்மொழிந்தார். பதவி விலகிய விஜய் ருபானி, துணை முதல்வர் நிதின் படேல் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் அவருக்கு ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.
எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத்தை சந்தித்த பூபேந்திர படேல் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர், முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் முதல்முறை எம்எல்ஏவான பூபேந்திர படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டி ருப்பது அனைவரையும் ஆச்சரி யத்தில் ஆழ்த்தியுள்ளது.
» தினசரி கரோனா தொற்று 27,254 ஆக குறைந்தது
» உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கரோனா பரிசோதனை: வணிக பயன்பாட்டுக்கு வருகிறது
இந்தநிலையில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியேரை பூபேந்திர படேல் சந்தித்து பேசினார். பின்னர் நிதின் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நான் 18 வயதில் இருந்து பாஜகவில் பணியாற்றி வருகிறேன், நான் தொடர்ந்து பணியாற்றுவேன். கட்சியில் எனக்கு பதவி கிடைத்தாலும், கிடைக்காமலும், நான் கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பூபேந்திர படேல் பழைய குடும்ப நண்பர்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago