நடிகர் ஷாருக்கான் பட பாணியில் ‘ஸ்நாப்டீல்’ பெண் ஊழியர் கடத்தல்: ஒருதலை காதலால் நடந்த விபரீதம்

By ஏஎன்ஐ

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படப்பாணியில் ‘ஸ்நாப்டீல்’ பெண் ஊழியரை கடத்திச் சென்று 30 மணி நேரத்துக்கு பின் மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ‘ஸ்நாப் டீல்’ நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தீப்தி சர்னா. கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பாததால், அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் போலீ ஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் கடத்தப்பட்ட தீப்தி சர்னா 30 மணி நேரத்துக்கு பின் எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்த சனிக்கிழமை வீடு திரும்பினார். தீப்தியை கடத்தியதற்காக அவரது பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டவோ, பாலியல் ரீதியிலான துன்புறுத்தலையோ அளிக்க வில்லை. இதனால் குழப்பமடைந்த போலீஸார் தீப்தியை கடத்திய ஐந்து பேரை கைது செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

அதில் தீப்தியை ஒருதலையாக காதலித்து பல மாதங்களாக அவரைப் பின் தொடர்ந்த தேவேந்தர் என்பவர் தான் இந்த கடத்தலுக்கு திட்டமிட்டது தெரிய வந்தது. தீப்தி தினமும் பணி முடிந்ததும் ஷேர் ஆட்டோவில் தான் வீடு திரும்புவார் என்பதால், அவருக்காகவே சொந்தமாக தேவேந்தர் ஷேர் ஆட்டோ வாங்கி யுள்ளார். பின்னர் கடத்தலில் நான்கு நண்பர்களையும் ஈடுபட வைப்பதற் காக தீப்தி மிகப் பெரிய தொழி லதிபர் என்றும், அவரை கடத்தி னால் ரூ.10 கோடி வரை பேரம் பேசலாம் எனவும் ஆசை காண்பித் துள்ளார். இதனால் அவர்களும் கடத்தலுக்கு உதவியுள்ளனர்.

அதன்படி கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து வைஷாலி ரயில் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறிய தீப்தியை கத்தியை காட்டி மிரட்டி தேவேந்தரும், அவரது நண்பர்களும் கடத்திச் சென்று 10 கி.மீ தொலைவில் ஒரு கரும்பு தோட்டத்தில் இருந்த பங்களாவில் தங்க வைத்துள்ளனர். பின்னர் அவருக்கு தேவையான உணவு, விருப்பமான ஸ்நாக்ஸ் வகைகள் ஆகியவற்றை தேவேந்தர் வாங்கி கொடுத்து, 30 மணி நேரத்துக்கு பின் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் போலீஸாரின் விசார ணையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து கடந்த 1993-ல் வெளியான ‘தர்’ (Darr) திரைப்பட பாணியில் இந்த கடத்தல் நாட கத்தை அரங்கேற்றியதாகவும் தெரி வித்துள்ளார். அந்த திரைப்படத்தில் ஷாருக்கான் ‘சைக்கோ’ கதாபாத் திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்