ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் ஊசியில்லா கரோனா தடுப்பூசியான ஜைகோவ்-டி மருந்து அக்டோபர் முதல்வாரத்தில் இந்தியாவி்ல் அறிமுகமாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசியை அவசரகாலத்துக்குப் பயன்படு்த்திக்கொள்ள கடந்த மாதம் 20ம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.
ஜைகோவ்-டி தடுப்பூசி உலகிலேயே முதன்முதலாக பிளாஸ்மா டிஎன்ஏ தடுப்பூசியாகும். கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசி என்பது ஜைடஸ் கெடிலா நிறுவனத்துடையது மட்டும்தான். கரோனாவுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு அதிக பாதுகாப்பும், திறன்மிக்கதாகச் செயல்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3 டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி, 28 மற்றும் 56 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும். 12 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினருக்காக இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
» டெல்லியில் ஒரே மாதத்தில் 38.3 செ.மீ மழை பதிவு : 77 ஆண்டுகளுக்குப் பிறகு வெளுத்து வாங்கிய கனமழை
» செப்டம்பர் 11-ம் தேதி மனித இனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினம்: பிரதமர் மோடி பேச்சு
ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஷர்வில் படேல் கூறுகையில் “ செப்டம்பர் நடுப்பகுதியில் தடுப்பூசி சப்ளையை தொடங்கிவிடுவோம், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து எங்கள் தடுப்பூசி கிடைக்கத் தொடங்கும்.
மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி தடுப்பூசி வீதம் சப்ளை செய்யத் திட்டமிட்டுள்ளோம். படிப்படியாக எங்கள் தயாரிப்பை உயர்த்தி மாதத்துக்கு 4 கோடி முத்ல 5 கோடி அளவுக்கு உற்பத்தியை அதிகரிப்போம்” எனத் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் 18வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு கோவாக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. கோவாக்ஸினுக்கு அடுத்தார்போல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பு மருந்து என்ற பெருமையும், முதல் டிஎன்ஏ வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
3 டோஸ் தடுப்பூசி
ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28-வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸ் செலுத்த வேண்டும். நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.
ஊசியில்லாத் தடுப்பு மருந்து
அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.
இந்தத் தடுப்பு மருந்து, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் கீழ்வரும். உயிர் தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago