சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியுள்ள பிரதமர் மோடி, பாரதியின் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி என்னென்றும் நினைவு கூறப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு என புரட்சிகரமான பாடல்களை எழுதினார்.
அவர் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று பாரதியாரின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
» கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 33,376 பேருக்கு தொற்று உறுதி
» ‘‘நான் ஒரு காஷ்மீர் பண்டிட்’’- ஜம்முவில் ராகுல் காந்தி பேச்சு: பாஜக கடும் விமர்சனம்
‘‘சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான அவரது நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago