நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72.37 கோடியை கடந்தது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட 67,58,491 தடுப்பூசிகளுடன், இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று காலை 7 மணி வரை நிலவரப்படி 72.37 (72,37,84,586) கோடியை கடந்தது. இது 74,18,183 அமர்வுகள் மூலம் சாதிக்கப்பட்டது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 37,681 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,42,299 ஆக அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நாட்டில் குணமடைந்தோர் வீதம் 97.49 சதவீதமாக உள்ளது.
» சென்னை, புதுச்சேரியில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி
» மும்பை- அகமதாபாத் ‘புல்லட் ரயில்’- தமிழகத்தில் தயாராகும் உபகரணம்
மத்திய, மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடந்து 75 நாட்களாக, 50,000க்கும் கீழ் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 34,973 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.
கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 3,90,646 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.18 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 17,87,611 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா இதுவரை, 53.86 கோடி (53,86,04,854) கோவிட் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் பரிசோதனை திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால், வாராந்திர பாதிப்பு வீதம் 2.31 சதவீதமாக உள்ளது. இது கடந்த 77 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு வீதம் 1.96 சதவீதமாக உள்ளது. இது கடந்த 11 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago