இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 71.65 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,51,701 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இன்று காலை 7 மணி நிலவரப்படி, இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 71.65 கோடியைக் (71,65,97,428) கடந்தது. 73,56,173 அமர்வுகள் மூலம் இது சாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மற்றும் விரிவாக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 40,567 நோயாளிகள் கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,04,618 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் வீதம் 97.48%.
» தேசவிரோதக் கருத்துகள் பேசத் தடை: ஊழியர்கள், அலுவலர்களுக்கு கேரள மத்தியப் பல்கலைக்கழகம் உத்தரவு
» தமிழகம், புதுச்சேரியில் 3 இடங்கள்: மாநிலங்களவை எம்.பி. தேர்தல் தேதி அறிவிப்பு
மத்திய, மாநில அரசின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு, தொடர்ந்து 74 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 43,263 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,93,614. இது மொத்த பாதிப்பில் 1.19 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 18,17,639 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா இதுவரை, 53.68 கோடி (53,68,17,243) பரிசோதனைகளைச் செய்துள்ளது.
நாடு முழுவதும் கோவிட் பரிசோதனை திறன் அதிகரித்துள்ள நிலையில், வாராந்திர பாதிப்பு வீதம் 2.43 சதவீதமாக உள்ளது. இது கடந்த 76 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம் 2.38 சதவீதமாக உள்ளது. கடந்த 10 நாட்களாக இது 3 சதவீதத்துக்கும் குறைவாகவும், தொடர்ந்து 94 நாட்களாக 5 சதவீதத்துக்கும் குறைவாகவும் உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago