ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது அந்நாடு வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்துள்ளனர், அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசு அமைப்பது பற்றி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். மனித உரிமைகளை மதித்து நடப்பார்கள் என்றும் நம்புகிறேன். அதேசமயம் அவர்கள் ஒவ்வொரு நாட்டுடனும் நட்புறவை வளர்க்க முயற்சிக்க வேண்டும். அது முக்கிய தேவையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago