ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய ரயில் பாதை குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரயில்வே அமைச்சருடன் சந்தித்துப் பேசினார்.
ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை இன்று சந்தித்துப் பேசினார்.
மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.
வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும் முருகன் கேட்டுக்கொண்டார். இது பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தை, ராமாயணம் சுற்றுலா இணைப்புப்பாதையோடு இணைக்க உதவும். இது உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும்.
» சாதி மோதலை தூண்டிய புகார்: சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை சிறையில் அடைப்பு
» ‘‘பாஜகவை தோற்கடிக்கவே உ.பி. தேர்தலில் போட்டி’’ - பிரச்சாரம் செய்ய வந்த ஒவைஸி பேட்டி
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரிவாக விவாதித்தார். மேலும், தமிழ்நாட்டின் ரயில்வே துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago