உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம், அதற்காகவே உ.பி. தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைஸி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அகில இந்திய இத்தாஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியும் போட்டியிடுகிறது. இக்கட்சித் தலைவர் ஒவைஸி, அயோத்தியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கி உ.பி.யின் கிழக்குப் பகுதி முழுவதும் ஒரு வாரம் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அயோத்தியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ருடவுலி தொகுதியில் ஒவைஸியின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது, இது ராமஜென்ம பூமியில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான கூட்டத்துக்கு ஒவைஸி கட்சியினர் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால், ஒவைஸியின் பிரச்சார முடிவுக்கு அயோத்தியை சேர்ந்த சாதுக்களும், முடித்து வைக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கின் மனுதாரரான இக்பால் அன்சாரியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் லக்னோ வந்த ஒவைஸிக்கு அவரது கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
» ‘‘திரிணமூல் தலைவர்களை அழைத்து வந்தது கட்சித் தலைமை செய்த தவறு’’- மேற்குவங்க பாஜகவில் அதிருப்தி
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். அதற்காக உ.பி. தேர்தலில் போட்டியிடுகிறோம். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். உத்தரபிரதேச முஸ்லிம்களின் வெற்றிக்கு எங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். உ.பி.யில் புதிய அத்தியாயம் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago