உலகத் தலைவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலக தலைவர்களின் தலைமைப் பண்பு, மக்கள் செல்வாக்கு குறித்துஅண்மையில் ஆய்வு நடத்தியது.
இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத் துக் கணிப்பில் 70 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர்.
அடுத்தபடியாக மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 64% வாக்குகள், இத்தாலி பிரதமர் மாரியோ தெராகி 63% வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் 53%, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 48%, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 48%, கனடா பிரதமர் ஜஸ்டின் 45%, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 41%, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ 39%, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 38%, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் 35%, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 34%, ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா 25% சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த 2020 மே மாதம் மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 84 சதவீத வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago