மேற்குவங்க மாநிலம் கலியாகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ சவுமன் ராய் இன்று அந்த கட்சியில் இருந்து விலகி ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து பிஷ்ணுபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ தன்மய் கோஷ், ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜக பலம் திங்களன்று 73 ஆகக் குறைந்தது.
இந்தநிலையில் மேற்குவங்க பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக இன்று மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.
மேற்குவங்க மாநிலம் கலியாகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ சவுமன் ராய் இன்று அந்த கட்சியில் இருந்து விலகி மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி முன்னிலையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.
திரிணமூல் காங்கிரஸில் இணைந்தது பற்றி சவுமன் ராய் கூறியதாவது:
‘‘சில சூழ்நிலைகள் காரணமாக நான் கலியாகஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டியிருந்தது. ஆனால் என் ஆன்மாவும் இதயமும் எப்போதுமே திரிணமூல் காங்கிரஸுக்கு சொந்தமானது.
முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சிகளுக்கு உறுதி துணையாக இருப்பதற்காகவே நான் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். கட்சியில் சில காலமாக நான் இல்லை. அதற்காக கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கோருகிறேன்" என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago