செம்மரக் கடத்தலை தடுக்க சட்டத் திருத்தம்: ஆந்திர துணை முதல்வர் தகவல்

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவில் செம்மரக் கடத்தலை தடுக்க வனத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என அம்மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில உள்துறை அமைச்சரும், துணை முதல்வரு மான சின்ன ராஜப்பா நேற்று திருமலை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தார். அங்கிருந்து சித்தூர் சென்ற அவர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி களுடன் சட்டம் ஒழுங்கு, பாது காப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜப்பா, ‘‘சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வரு கிறது. இதனால் வரும் பட்ஜெட்டில் மாநில பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். போலீஸாரின் நடவடிக்கை காரணமாக செம்மரக் கடத்தல் தற்போது 80 சதவீதம் வரை குறைந்துவிட்டது. எனினும் முழுமையாக தடுக்கும் நோக்கில் வனத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான நட வடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்