கர்நாடகாவில், கேரளாவையொட்டியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிக அளவில் கோவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடர்ந்து கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகம் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
» முன்னாள் எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்; குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
» இந்தியாவில் கூடும் கரோனா தொற்று: 24 மணி நேரத்தில் உயிரிழப்பு 500க்கு மேல் அதிகரிப்பு
இதனால் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கேரள மக்கள் பயணம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கர்நாடகா ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்தநிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகா அண்டை மாநிலம் என்பதால் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கரோனா பரவாமல் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளாவையொட்டியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிக அளவில் கோவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 7 நாட்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்த பிறகே கர்நாடாவுக்குள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago