முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சந்தன் மித்ரா. பாஜக சார்பில் ஆகஸ்ட் 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.
பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சந்தன் மித்ரா 2018-ல் பாஜக இருந்து விலகினார். பின்னர் அவர் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார்.
இந்தநிலையில் சந்தன் மித்ரா நேற்று இரவு டெல்லியில் காலமானார். இதனை அவரது மகன் குஷன் மித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சந்தன் மித்ரா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “சந்தன் மித்ரா ஒரு சிறந்த பத்திரிக்கையாளர், எம்.பி. இந்தி பேசும் பகுதியின் மக்கள், வரலாறு பற்றிய அவரது புரிதல் ஆழமானது. அவரது மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.
சந்தன் மித்ரா மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ சந்தன் மித்ரா தனது அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் என்றும் நம் நினைவில் வாழ்வார். அவர் அரசியல் மற்றும் ஊடக உலகில் புகழ் பெற்று விளங்கியவர்.
அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம்சாந்தி” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago