கேரளாவில் அதிகரிக்கும் தொற்று:  தமிழகம், கர்நாடகாவில் உஷார்; மன்சுக் மாண்டவியா ஆலோசனை

By செய்திப்பிரிவு

கேரளாவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழக மற்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடர்ந்து கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது. இதனால் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கேரள மக்கள் பயணம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கர்நாடகா ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகம் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் போது இரு மாநிலங்களும் கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் மக்கள் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்