இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 65.41 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 65.41 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,33,18,718 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 69,06,357 முகாம்களில் 65,41,13,508 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
» ‘இஸ்கான்’ நிறுவனர் சுவாமி பிரபுபாதா பிறந்த தினம்; ரூ.125 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
கடந்த 24 மணி நேரத்தில் 33,964 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,93,644 ஆக உயர்ந்துள்ளது.
நம்நாட்டில் குணமடைந்தவர்களின் சதவீதம் 97.51 சதவீதமாக உள்ளது.
தொடர்ந்து 66 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,78,181 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.15 சதவீதம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,06,785 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,31,84,293 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி சதவீதம் தொடர்ந்து 68 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.58 சதவீதம் என்ற அளவிலும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.61 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 36 நாட்களாக அன்றாடத் தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 86 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago