தொற்று எண்ணிக்கை 30,203; பலி 115: கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

By செய்திப்பிரிவு

கேரளாவில் இன்றும் கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடர்ந்து கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து காணப்பட்டது. கடந்த இரு தினங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து இருந்தநிலையில் இன்று மீண்டும் 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

கேரளவில் இன்று ஒரே நாளில் 30,203 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 1,60,152 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30,203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாஸிடிவிட்டி விகிதம் 18.86% ஆக உள்ளது.

அங்கு ஒரே நாளில் கரோனாவால் 115 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,788 ஆக உயர்ந்துள்ளது.

20,687பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 38,17,004 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,18,892 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்