டெல்லியின் அனைத்து அரசு மருத்துவமனைகளும் ஒரே இணையதளத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு. இதனால், வரிசையில் நிற்காமல் வீட்டிலிருந்தபடி மருத்துவர்களிடம் நேரம் கேட்கும் வசதி செய்யப்பட உள்ளது.
டெல்லியிலுள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் எந்நேரமும் நோயாளிகளின் கூட்டம் அதிகம் இருப்பது உண்டு. இதனால், பொதுமக்களுக்கு அதிகமான சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இடமின்மை காரணமாக உடனடியாக அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சிக்கல்களை முடிவிற்கு கொண்டுவர டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அமைச்சகம் நேற்று கூடி ஒரு திட்டம் வகுத்துள்ளது.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் கூடிய அமைச்சகம், சுகாதாரத் தகவல் நிர்வாக முறை எனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியின் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஒரே இணையதளத்தில் இணைக்கப்பட உள்ளன.
» தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்ட ரவுடி: போலீஸ் என்கவுன்ட்டரில் பலி
» நாடு முழுவதும் ஒரே நாளில் 42,909 பேருக்கு கரோனா பாதிப்பு; 380 பேர் உயிரிழப்பு
இதன்மூலம், எந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் உள்ளன என எளிதாக அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு அங்குள்ள மருத்துவர்களிடம் வீட்டிலிருந்தபடியே போனில் பேசி நேரம் ஒதுக்கி நேரில் செல்லும் வசதியும் செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்தினை ரூ.130 கோடி செலவில் அமலாக்க நிதியையும் முதல்வர் கேஜ்ரிவால் அரசு ஒதுக்கியுள்ளது. டெல்லி மருத்துவமனைகளின் நவீன வசதிகளையும் இந்த நிதியில் மேம்படுத்தப்படும்.
இத்துடன் கூடுதலாக 6,836 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. தற்போது டெல்லி அரசின் மருத்துவமனைகள் அனைத்திலும் சேர்த்து 10,000 படுக்கைகள் உள்ளன.
இந்த கூடுதல் படுக்கைகளிலினால் கரோனா பரவலின் மூன்றாவது அலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் சமாளிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
டெல்லி அரசின் சார்பில் ஓட்டுநர் உரிமம், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட 150 வகையான சேவைகள் வீட்டிற்கே அளிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சேவைக்காக பொது தொலைபேசி எண் 1076 அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகளை மேம்படுத்தி முடிக்கவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் அரசு சேவைகளை வீட்டுக்கே வந்து செய்வது வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago