இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா தொற்று: ஒரே நாளில் 46,164 பேருக்கு பாதிப்பு உறுதி

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,164 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று முன்தினம் இருதினங்களுக்கு முன்ன 25,467 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து நேற்று முன்தினம் 35,593 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,164 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் அன்றாட பாதிப்பு (31,445) அதிகரித்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 46,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 3,25,58,530 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவில் இருந்து 3,17,88,440 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 34,159 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,33,725 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 607 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,36,365 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 60,38,46,475 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80,40,407 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்