கொலீஜியம் பரிந்துரை ஏற்பு: 3 பெண்கள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான பரிந்துரையை அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் முறைப்படி நீதிபதிகள் பதவியேற்றுக் கொள்வர்.

ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. இந்த 9 பேரில் 8 பேர் நீதிபதிகள் ஒருவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

9 நீதிபதிகளின் விவரம்:

பட்டியலில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிபதி சி.டி.ரவிக்குமார், மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக கடந்த 17 ஆம் தேதி நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கார், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய கொலீஜியம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் தான் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

மூன்று பெண் நீதிபதிகள் யார்?

கொலீஜியம் முதன்முறையாக ஒரே தீர்மானத்தில் மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள் நாகரத்னா, ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் தான் அந்த மூன்று பெண் நீதிபதிகள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வாய்ப்பு:

கொலீஜியம் பரிந்துரைத்துள்ள 9 பேரில், நீதிபதிகள் நாகரத்னா, நரசிம்மா, விக்ரம் நாத் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கூடுதல் சாலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்த நரசிம்மா உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 8 பேர் இதுபோல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்