டெல்லி அருகேவுள்ள குர்கானில் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இளம்பெண் (23 வயது) ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பஹதுர்கார் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரன்தீர் சிங் கூறும்போது, "குர்கான் பஹதுர்கார் பகுதியில் உள்ளது பிரம் சக்தி சஞ்சீவமி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, "அதிகாலை 3.30 மணியளவில் வெர்னா காரில் இருந்து ஒருவர் இறங்கி நேராக அவசர சிகிச்சைக்குப் பிரிவுக்குள் செல்வது பதிவாகியுள்ளது.
மேலும் சம்பவம் நடந்தபோது அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்ததும் பதிவாகியுள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆராயும்போது, அப்பெண் இருந்த படுக்கைக்கு அடுத்தடுத்த படுக்கையில் நோயாளிகள் இருந்தாலும் யாருக்கும் அவரது அலறல் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. சிறிது நேரம் கழித்து அதே நபர் ஐ.சி.யூவில் இருந்து வெளியேறும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரது கணவர் டெல்லி போலீஸில் பணி புரிகிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago