இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 25,072 ஆக சரிந்தது: 389 பேர் பலி

By ஏஎன்ஐ

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 25,072 ஆக சரிந்துள்ளது. இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,072 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 25,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 3,24,49,306 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவில் இருந்து 3,16,80,626 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 44,157 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,33,924 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,34,756 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 58,25,49,595 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,95,543 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்