‘‘இந்தியா சொர்க்கபுரி’’ - ஆப்கனில் இருந்து அடைக்கலமாக தப்பி வந்த பெண் பேட்டி

By செய்திப்பிரிவு

தலிபான்கள் தனது வீட்டை எரித்து விட்டதாகவும், அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதாகவும் ஆப்கனில் இருந்து அகதியாக இந்தியா வந்துள்ள அந்நாட்டு பெண் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது. இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூலில் இருந்து இந்தியா வந்தது. இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி ஆப்கன் நாட்டைச் சேர்ந்த மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சதியாவும் அவரது குடும்பத்தினரும் இந்தியா வந்துள்ளனர்.

பின்னர் தலிபான் தீவிரவாதிகளுடன் தனக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவத்தை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சதியா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

தலிபான்களால் குறைந்தது நான்கு முதல் ஐந்து மணிநேரம் வரை தடுத்து வைக்கப்பட்டதாகவும், அந்த குழு தனது வீட்டை எரித்ததாகவும் கூறினார்.
"ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்தது, அதனால் நான் என் மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இங்கு வந்தேன். எங்கள் இந்திய சகோதர சகோதரிகள் எங்களை மீட்டுள்ளனர். தலிபான்கள் என் வீட்டை எரித்தனர். பெண்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக இல்லை. எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி. இந்தியா உண்மையில் சொர்க்கபுரி தான் "என்று அவர் மேலும் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE