ஆப்கானிஸ்தானில் பெண்கள் கொல்லப்படுவதாக இங்கே சிலர் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள், ஆனால் இந்தியாவில் 5-வயதுக்குட்பட்ட 9 பெண் குழந்தைகளில் ஒன்று இறந்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, மத்திய அரசுக்கு இதை பற்றி கவலையில்லை என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள் என்றும் ஆப்கன்மக்களும் அவர்களின் தலைமையின் கீழ் இருக்க விரும்புகின்றனர் என்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பர்க் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மீது உ.பி. போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, ‘‘ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் கொடுமைகள் இழைக்கின்றனர். போராட்டம் நடத்தும் சொந்த நாட்டு மக்களையே தலிபான்கள் சுட்டுக் கொல்கின்றனர்.
ஆனால், இங்கே சிலர் வெட்கமே இல்லாமல் தலிபான் தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர்’’ என கூறியிருந்தார். இதுபோலவே தலிபான்கள் நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது:
» பிரதமர் மோடிக்கு 20 ஆண்டுகளாக ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை அனுப்பும் பாகிஸ்தானிய சகோதரி
» 18 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை
இந்தியாவில் 5-வயதுக்குட்பட்ட 9 பெண் குழந்தைகளில் ஒன்று இறந்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் தினம் தினம் நடைபெறுகின்றன. ஆனால் மத்திய அரசுக்கு இதை பற்றி கவலையில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கொல்லப்படுவதாக இங்கே சிலர் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள், மத்திய அரசு கவலைப்படுகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கவில்லையா.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago