ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி ஒருவர் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை ஆகியவற்றை அனுப்பி வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
சகோதரத்துவத்தை விளக்கும் பண்டிகையாக வடமாநிலங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் காலண்டரில் ஷரவணா மாதத்தின் கடைசி நாளில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ஆசி பெறுவார்கள். சகோதரிகளை ஆசீர்வாதம் செய்யும் சகோதரர்கள் அவர்களுக்குப் பரிசுகள், பணம், நகை ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்குவது வழக்கமாகும்.
அந்த வகையில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 20 ஆண்டுகளாக ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை அனுப்பி ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.
» இபிஎப்- ஆதார் எண் இணைப்பு கட்டாயம்; ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாள்
» 3.86 கோடி பேர் உரிய காலத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை: மத்திய அரசு தகவல்
பாகிஸ்தானைச் சேர்ந்த குவாமர் மோசின் ஷேக் என்ற பெண் திருமணம் முடிந்தபின் இந்தியாவில் குடிபெயர்ந்தார். தற்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் வாழ்ந்து வருகிறார். பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஊழியராக இருந்த காலத்தில் இருந்து அவருக்கு ரக்ஷா பந்தன் நாளை முன்னிட்டு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகள் வழங்கி ஆசி பெற்று வருகிறார். மோடி குஜராத் முதல்வரான பின்னும் பிரதமராகப் பதவி ஏற்ற பின்பும் அவரைச் சந்திக்க முடியவில்லை என்பதால், தபால் மூலம் ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகளை மோசின் ஷேக் அனுப்பி வருகிறார்.
வரும் 22-ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுவதையடுத்து, பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகளை மோசின் ஷேக் அனுப்பி வைத்துள்ளார்.
மோசின் ஷேர் அளித்த பேட்டியில் கூறுகையில், “என் சகோதரர் மோடிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் அவரின் நலத்துக்காகப் பிரார்த்திக்கிறேன். விளையாட்டு வீரர்களுடன் சமீபத்தில் பிரதமர் மோடி பேசியதை சேனல்களில் பார்த்தேன். ஒரு விளையாட்டு வீரரின் தாயான என்னையும் என் குடும்பத்தாரையும் பிரதமர் மோடி டெல்லிக்கு அழைத்து ராக்கி கயிறு கட்டச் சொல்லுவார் என நம்புகிறேன். என்னுடைய மகன் சூபியான் ஷேக், உலகிலேயே இளம் வயது நீச்சல் வீரர். பல விருதுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார்.
தேசத்துக்குாக உழைப்பவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவது மோடியின் நல்ல குணம். கரோனா பிரச்சினையை பிரதமர் மோடி சிறப்பாகக் கையாண்டார். தடுப்பூசி போடும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். தடுப்பூசி செலுத்துவோரின் அச்சத்தைப் போக்கும் வகையில் மோடி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். நான் முதன்முதலில் ரக்ஷா பந்தனை மோடியுடன் 20 ஆண்டுகளுக்கு முன் கொண்டாடினேன். அப்போது மோடி ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட முயன்று வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago