18 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை

By செய்திப்பிரிவு


மழைக்காலக் தொடர், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொலி வாயிலாக 18 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

காணொலி மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் எதிர்க்கட்சிகள் தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

காணொலி வாயிலாக நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் ஆகியோர் அழைக்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் விடுக்கும் கூட்டறிக்கையில் என்னென்ன விவகாரங்களைச் சேர்க்கலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், எதிர்்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் பேசியுள்ளனர், சில ஆலோசனைகளையும் பெற்றுள்ளதாகக் தெரிகிறது.

மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் வீணாகிப் போனதற்கு முழுக்க மத்திய அரசின் செயல்பாடுகளே காரணம். பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து இருந்திருந்தால், அவை சூமாகமாக நடந்திருக்கும் . ஆனால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளைப் பேசவே மத்தியஅரசு அனுமதிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், 3-வது கரோனா அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிடுதல், நாட்டின் பொருளாதார நிலைமை, அதிகரித்துவரும் வேலையின்மை, கரோனா பெருந்தொற்றால் வேலையிழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிடலாம் எனத் தெரிகிறது.

மேலும், தேசவிரோதச் சட்டத்தை பாகுபாட்டுடன் சமூக ஆர்வலர்கள், அரசியல்கட்சித் தொண்டர்கள் மீது பயன்படுத்துவது குறித்தும் அறிக்கையில் இடம் பெறக்கூடும்.

ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்தநாளான இன்று எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரேதளத்தில் ஒன்று கூடுகின்றனர். கரோனா தொற்று குறையும்பட்சத்தில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியுடன் நேரடியான சந்திப்பில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் த லைவர்களுக்கு சிற்றுண்டி அளி்த்து கடந்த வாரத்தில் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தத்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்