ஆப்கன் அகதிகளுக்கு விசா வழங்கும் ஆஸ்திரேலியா: தூதரகம் முற்றுகை

By செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 3 ஆயிரம் ஆப்கன் மக்களுக்கு விசா வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் டெல்லியில் உள்ள ஆப்கன் மக்கள் நூற்றுக்கணக்கானோர் விசா பெறுவதற்காக டெல்லி ஆஸ்திரேலிய தூதரகம் முன்பு குவிந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறும் விமானங்களில் ஏறி தப்பிச் செல்லவும் அவர்கள் முயன்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் படிப்பதற்காகவும், தொழில் செய்வதற்காகவும் சென்ற ஆப்கானிஸ்தான் மக்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் வேறு நாடுகளில் குடியேற முயன்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதாக கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் இந்த நாடுகளில் குடியேற ஆப்கன் மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்ததநிலையில் டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 3 ஆயிரம் ஆப்கன் மக்களுக்கு விசா வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் டெல்லியில் உள்ள ஆப்கன் மக்கள் நூற்றுக்கணக்கானோர் விசா பெறுவதற்காக டெல்லி ஆஸ்திரேலிய தூதரகம் முன்பு குவிந்தனர்.

அதேசமயம் அவர்கள் ஆப்கன் அகதிகள் என்பதற்கான ஒப்புதலை ஐ.நா. அளிக்க வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. இதனால் ஐ.நா.வின் ஒப்புதல் கடிதம் பெற ஆப்கன் அகதிகள் முயன்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்