அரசாணையை இணையத்தில் உடனடியாக வெளியிட வேண்டும்: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

By என்.மகேஷ்குமார்

அரசாணைகளை இணையத்தில் வெளியிட தேவையில்லை எனதெலங்கானா அரசு அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக 'வாட்ச் வாய்ஸ் ஆஃப் பீப்பிள்' என்ற அறக்கட்டளை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஹிமகிருஷ்ணா, விஜய்சேனா ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, "ஒரு திட்டத்தை தயாரிக்கும் அரசு, அதன் நிபந்தனைகளை கூட தெரியப்படுத்தாமல் எப்படி அமல்படுத்தலாம்? ” என நீதிபதி கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு அட்வகேட் ஜெனரல் பிரசாத் பதில் அளிக்கையில், "சட்டத்துடன் நிபந்தனைகளையும் நாங்கள் தயாரித்தே அமல் படுத்துகிறோம்" என்றார்.

பின்னர் நீதிபதிகள், ‘‘மக் களுக்கு அரசு என்ன உத்தரவு வழங்குகிறது, அரசாணை என்ன கூறுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். இதில் ரகசியம் தேவையில்லை. எனவே, அரசாணை பிறப்பித்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்