சொத்துக் குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அமலாக்க துறை நேற்று மேலும் 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இதுவரை ஜெகன்மோகன் ரெட்டி மீது 11 குற்றப் பத்திரிகைகளை அமலாக்கத் துறை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவற்றில் 7 குற்றப் பத்திரிகைகள் தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் ஹான்பிக் மற்றும் லேபாக்ஷி நாலெட்ஜ் ஹப் வழக்குகளில் அமலாக்கத் துறை சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று மேலும் 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இதனை சிபிஐ நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago