சல்மான் கானை விடுவித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு தவறு: உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு வாதம்

By எம்.சண்முகம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இரவு குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி யதில், மும்பை நகரின் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர் நீதி மன்றம் சல்மான் கானை வழக்கில் இருந்து விடுதலை செய்து கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.

திடீரென வந்த டிரைவர்

இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசார ணைக்கு வந்தது. மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, ‘விபத்து ஏற்படுத்திய வழக்கில் இருந்து சல்மான் கானை விடுதலை செய்தது தவறான தீர்ப்பு. சல்மான் கானின் பாதுகாவ லர் ரவீந்திர பாட்டீல், ‘குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டாம்’ என்று சல்மான் கானை எச்சரித்ததாக அளித்த வாக்குமூலத்தை மும்பை நீதிமன்றம் ஏற்கவில்லை. (ரவீந்திர பாட்டீல் 2007-ம் ஆண்டு எலும்புருக்கி நோயால் இறந்துவிட்டார்). விபத்து நடந்து 12 ஆண்டுகளுக்குப் பின் கொண்டு வரப்பட்ட சாட்சியான அசோக் சிங் காரை ஓட்டியதாக குறிப்பிட்டுள்ளார். இவர் சல்மான் கான் தந்தையின் கார் டிரைவர். அவரது சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வித்தியாசமாகவும் ஆச்சர்யம் அளிக்க கூடியதாகவும் உள்ளது’ என்று வாதிட்டார்.

மேலும், ‘சல்மான் கான் காரை ஓட்டியது சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த 12 நேரங்களுக்குப் பின்னர் சல்மான் கானிடம் எடுத்த ரத்த மாதிரியில் கூட, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது குடித்த அடையாளம் இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏற்காமல் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று மகாராஷ்டிர அரசு சார்பில் வாதிடப்பட்டது.

சல்மான் கான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘முக்கிய சாட்சி ஒருவரின் சாட்சியம் தவறான முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த சாட்சியத்தின் சரியான, ஆதாரப்பூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர்.

இந்த வழக்கு, தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப் படவில்லை; விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட் டுள்ளது. எனவே, வழக்கை விரிவாக விசாரிக்க நீதிமன்றம் விரும்புகிறது. எனவே, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்