கரோனா தடுப்பூசிக்காக எந்த நாட்டையும் இந்தியா சார்ந்திருக்கவில்லை: செங்கோட்டையில் பிரதமர் மோடி பெருமிதம்

By ஏஎன்ஐ

இந்தியாவில் மிகப்பெரிய கரோனா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என செங்கோட்டையில் பெருமையாகக் கூறுவேன். 54 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள், தடுப்பூசிக்காக இந்தியா எந்த நாட்டையும் சார்ந்திருக்கவில்லை என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உற்சாகமாக மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டின் 75-வது சுதந்திரன விழா இன்று நாடுமுழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். முன்னதாக பிரதமர்மோடி செங்கோட்டைக்குச் செல்லும் முன், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு வந்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக 75-வது சுதந்திரனத்துக்கு பிரதமர் மோடி மக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில்” இந்த 75-வது சுதந்திர தினவிழாவில் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்த ஆண்டு சுதந்திரதினம், மக்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கட்டும் ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.

அதன்பின் பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் சென்றார். செங்கோட்டையில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர் அஜெய் பாட், பாதுகாப்புத்துறை செயலர் அஜெய் குமார் ஆகியோர் வரவேற்றனர். செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை முப்படைத் தரப்பில் அளிக்கப்பட்டது. அந்த அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தவுடன், எம்.ஐ 17 4 ரக ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து மலர்கள் தூவப்பட்டன. அதன்பின் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சுபேதார் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 32 வீரர்கள் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். முதல்முறையாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் இரு அதிகாரிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

கரோனாவில் சிறப்பாக பங்காற்றிய கரோனா போர்வீரர்களுக்கு தனியாக வளாகம் அமைக்கப்பட்டு அவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் 75-வது சுதந்திரனத்தையடுத்து டெல்லி நகர் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸார், துணை ராணுவப்படையினர், ராணுவம் என பல்வேறு அடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசுகையில் “ இந்த சுதந்திரதின விழாவில் சிறப்பான தருணத்தில் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்த நாள், நம்முடைய மிகஉயர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் தருணம்.

கரோனா காலத்தில் நம்முடைய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தடுப்பூசி கண்டறிந்த அறிவியல் வல்லுநர்கள், சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட கோடிக்கணக்கான மக்கள், ஒவ்வொரு தருணமும் மற்றவர்களுக்கு சேவை செய்ய நினைத்த அனைவரும் இந்த நேரத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசத்துக்கு பெருமை சேர்த்த ஒலிம்பிக் வீரர்களும் நம்முடன் அமர்ந்துள்ளார்கள். அவர்களின் இந்த சாதனையை பாராட்ட வேண்டும் என நான் தேசத்துக்கு வலியுறுத்துகிறேன். நம்முடைய இதயங்களை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினரையும் இவர்கள் வென்றுவிட்டார்கள்.

இந்திய மக்கள் மிகுந்த பொறுமையுடன் கரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டார்கள். நமக்கு பல சவால்கள் இருந்தன, ஆனால், ஒவ்வொரு துறையிலும் அளவுக்கு அதிகமான வேகத்தில் பணியாற்றினோம். நம்முடைய தொழிலதிபர்கள், அறிவியல் வல்லுநர்களின் வலிமையின் விளைவால் இந்தியா இன்று எந்த நாட்டையும் தடுப்பூசிக்காக சார்ந்திருக்கத் தேவையி்ல்லை.

இந்தியாவில் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது என செங்கோட்டையில் பெருமையாகக் கூறுவேன். 54 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். ஒவ்வொரு நாடும் வளர்ச்சி பயணத்தில் ஒரு புதிய முடிவிலிருந்து தன்னை வரையறத்துக் கொள்ளும். புதிய தீர்மானங்களுடன் தன்னை முன்னெடுத்துச் செல்லும். இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அந்த நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்