நாடு முழுவதிலும் மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு நேற்று முன்தினம், நாடு முழுவதிலும் 52 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண் டுள்ளதாக புள்ளி விவரம் வெளியிட்டது.
இதில் ஆண்கள் 27 கோடியே 86 லட்சத்து 40,043 எனவும், பெண் கள் 24 கோடியே 75 லட்சத்து 3,625 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 36,418 குறைவாக இருந்தது.
இதனை தேசிய மகளிர் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களில் ஆண்களை விட பெண்கள் 3 கோடி குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சம விகிதம் கடைப்பிடிக்கப் பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago