நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியது. இதில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாக கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு நேற்று கூறும்போது, “அவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு உறுப்பினர்களும் எனது இரண்டு கண்கள். அவர்களை சமமாகவே கருதி வருகிறேன். இரண்டு கண்களால் மட்டுமே சரியான பார்வை சாத்தியமாகும். அவையின் சுமுகமான செயல்பாட்டை உறுதிப்படுத்துவது இரு தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாகும். மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் அத்துமீறல்கள் தொடர்பாக விரிவான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, விரைவில் தகுந்த முடிவு எடுக்கப்படும்” என்றார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago