மகளிர் சுய உதவிக் குழுவினருடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாடுகிறார். அப்போது, 4 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,625 கோடி நிதியை விடுவிக்கிறார்.
பெண்கள் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தற்சார்பு பெண்கள் அமைப் பினருடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். இதில் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்கின்றனர். சுய உதவிக் குழுவினர் வெற்றிக் கதைகள் தொகுப்பையும் பிரதமர் வெளியிடுகிறார்.
மேலும், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1,625 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவிக் கிறார். பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் 7,500 பேருக்கு ரூ.25 கோடியை முதலீட்டு பணமாகவும் மற்றும் ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.4.13 கோடி நிதியையும் பிரதமர் விடுவிக்கிறார். இதை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago