ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனை ரஜினிக்கு ஆந்திர அரசு ரூ.25 லட்சம் நிதி உதவி

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், எர்ரவாரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவர் சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கியில் 4-வது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியிடம் தோல்வியடைந்த போதிலும் தங்களது செயல்திறனால் ரசிகர்கள் மனதை வென்றனர். இந்நிலையில், ஹாக்கி வீராங்கனை ரஜினி நேற்று தனது பெற்றோருடன் குண்டூரில் உள்ள அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார்.

அவரை பூங்கொத்து கொடுத்து முதல்வர் ஜெகன் வரவேற்றார். அப்போது ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடியதாக ரஜினியை ஜெகன் வெகுவாக பாராட்டினார். பின்னர் ரஜினிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவும், திருப்பதியில் 1,000 கஜத்தில் வீட்டு மனைப்பட்டாவும், ரஜினியின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிதி உதவியும் வழங்குவதாக அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்