4 லட்சம் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1625 கோடி  மூலதன நிதி: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்

பெண்கள் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு விதமான தற்சார்பு பெண்கள் அமைப்பினருடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் சுயஉதவிக் குழுவினர்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) கீழ் உருவாக்கப்பட்ட சமுதாய சேவையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நாளை மதியம் 12.30 மணியளவில் காணொலி மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினரின் வெற்றி கதைகளின் தொகுப்பு மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்த கையேடு ஆகியவையும் பிரதமரால் வெளியிடப்படும்.

4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1625 கோடி அளவில் மூலதன நிதி உதவியையும் பிரதமர் விடுவிக்கிறார். மேலும், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின், பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ( PMFME), சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் 7,500 பேருக்கு ரூ.25 கோடியை முதலீட்டு பணமாகவும் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.4.13 கோடி நிதியையும் பிரதமர் விடுவிக்கிறார்.

மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் பசுபதி குமார் பரஸ், ஊரக மேம்பாட்டு இணையமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ஃபகன் சிங் குலாஸ்தே, பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் கபில் மொரேஸ்வர் பாட்டீல் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE