ஆக.16 முதல் பள்ளிகள் திறப்பு: ஆந்திர கல்வி அமைச்சர் சுரேஷ் தகவல்

By என். மகேஷ்குமார்

ஆந்திராவில் வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கரோனா பரவல் காரணமாக, கடந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் இண்டர்மீடியட் (பிளஸ்-2) படித்த மாணவ,மாணவிகள், முந்தைய தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களும் எவ்வித தேர்வும் இன்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டுக்காக கடந்த ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளி,கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. சில தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மாநில கல்வி அமைச்சர் ஆதிமூலபு சுரேஷ் நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசுமற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி 95% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மற்றவர்களும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

வரும் 16 முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில்10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். கரோனா விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்