உலக சிங்க தினமான இன்று வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆசிய சிங்கத்தின் தாயகமாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். சிங்கங்கள் தொடர்பான பல்வேறு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
உலக சிங்க தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் சிங்கங்கள் தொடர்பான பல்வேறு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
» 147 நாட்களில் இல்லாத அளவு கரோனா தொற்று எண்ணிக்கை சரிவு: உயிரிழப்பும் குறைவு
» உங்க பெயர் நீரஜ்ஜா.. ரூ.501க்கு இலவச பெட்ரோல்: குஜராத் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொண்டாட்டம்
சிங்கம் கம்பீரமாகவும் தைரியமாகவும் இருக்கும். ஆசிய சிங்கத்தின் தாயகமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. உலக சிங்க தினமான இன்று, சிங்கங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில வருடங்களாக இந்தியாவின் சிங்கங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
குஜராத் முதல்வராக நான் பணியாற்றியபோது அங்குள்ள கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை பாதுக்காக்கவும் வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago