மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது அணைகட்ட தீவிர பணிகள் நடந்தநிலையில் தமிழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.
மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க தமிழகத்திலுள்ள சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி சென்று ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர். அப்போது மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் கூறி வருகிறார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளதாவது:
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளோம். நான் டெல்லி சென்றபோது மத்திய அரசு இதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தனர். விரைவில் டெல்லி செல்லவுள்ளேன்.
மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் தற்போதைய நிலவரம் குறித்த விரிவாக விளக்கவுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago