கரோனா லாக்டவுனால் நாட்டில் காசநோயாளிகள் எண்ணிக்கை 25 % குறைந்தது

By செய்திப்பிரிவு


கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள், வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், சமூக விலகலைப் பின்பற்றுதல் ஆகியவற்றால் நாட்டில் காச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது.

மக்களவையில் கடந்த செவ்வாய்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த தகவலில், கடந்த 2019ம் ஆண்டில் காச நோயால் இந்தியாவில் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் வரை 18 லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலி்ல் கரோனா நோயாளி 2020ம் ஆண்டு ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின் மார்ச் மாதத்திலிருந்து நோய் தொற்று அதிகரித்து, மார்ச் 24ம் தேதி முதல் தேசிய அளவிலான லாக்டவுன் கொண்டுவரப்பட்டது.

காசநோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது குறித்து டெல்லி காசநோய் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் கே.கே. சோப்ரா கூறுகையில் “ கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் மூலம், மக்கள் போதுமான அளவு பரிசோதனைக்குச் செல்ல முடியவில்லை. வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சத்தால் யாரும் செல்லவில்லை. எங்கள் மருத்துவமனையில் பணியாற்றுவோர் கூட மருத்துவமனைக்கு முறையாக வரவில்லை, பரிசோதனை அளவும் குறைந்துவிட்டது.

காசநோயாளிகளை நேரடியாக பரிசோதித்துதான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கரோனா பரவல் காரணமாக மொத்தமாக ஒரு மாதத்துக்கு மருந்தும், சில நேரங்களில் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை செய்து, மருத்துகளை வழங்கினோம்.

டெல்லி மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களி்ல் காசநோயாளிகள் மருத்துவமனைக்கு முறையாகச் செல்ல முடியாமல் லாக்டவுன் நேரத்தில் மிகுந்த சிரமப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்களுக்கு தொண்டுநிறுவனங்கள் மருந்துகளை வழங்கி உதவி செய்தன.

இதனால் தனியார் மருத்துவர்களுடன் இணைந்து, நோயாளிகளிடம் இருந்து ரத்தமாதிரிகள், சளி மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்தோம். ஆனால், முதல் அலையைவிட, 2-வது அலைக்கு நன்றாகத் தயாராகிவிட்டோம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவிட்டோம். கரோனா அச்சம் காரணமாகக் கூட காசநோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வராமல் இருக்கலாம்.

முக்கியமாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் மக்கள் சுதந்திரமாக அலைவது குறைந்துவிட்டது. இதனால் காசநோயாளிகள் புதிதாக உருவாவதும், பாதிக்கப்படும் குறைந்துவிட்டது. மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக்கடைப்பிடித்தல், காற்று மாசு குறைந்திருத்தல் போன்றவற்றாலும் காசநோயாளிகள் குறைந்துள்ளனர் ” எனத் தெரிவித்தார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்ல நுரையீரல் பிரிவின் முன்னாள் தலைவர் மருத்துவர் கில்நானி கூறுகையில் “ கரோனா லாக்டவுனால் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன. மக்கள் முகக்கவசம் அணிந்திருத்தல், சமூக விலகலைக் கடைபிடித்தல், கூட்டமாக சேராதிருத்தல் போன்றவற்றால் காசநோய் பரவுவது மட்டுமின்றி இதர நோய்களில் பாதிக்கப்படும் அளவும்குறைந்துள்ளது உண்மைதான்.

பல மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் குறைந்துள்ளது. காசநோய் என்பது ஒருவர் இருமுதல், தும்முதல் மூலம் வரும் நீர்த்துளி மூலம்பரவும். ஆனால் மக்கள் தற்போது முகக்கவசம் அணிந்திருத்தலால் அந்த பாதிப்பும், பரவுவதும் குறைந்து வருகிறது. காசநோய் கிருமி ஒருவர் உடலுக்குள் சென்று வாழ்ந்து வளரும் காலம் நீண்டது. ஆதலால், இப்போது குறைந்துள்ளது, ஆனால், நீண்டகாலத்தில்தான் உண்மை நிலவரம் தெரியும்” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்