51.66 கோடி கரோனா தடுப்பூசி; திட்டத்தை வேகப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

இதுவரை 51.66 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் புதிய திட்டம் 2021 ஜூன் 21 முதல் தொடங்கியது.

அதிக தடுப்பு மருந்துகளை கிடைக்க செய்வதன் மூலமும், தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலமும் தடுப்பு மருந்து விநியோக சங்கிலியை முறைப்படுத்துவதன் மூலமும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

நாடு தழுவிய தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது.

51.66 கோடிக்கும் அதிகமான (51,66,13,680) தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 55,52,070 டோஸ்கள் வழங்கப்பட உள்ளன.

இவற்றில் வீணானது உட்பட 49,74,90,815 டோஸ்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன (இன்று காலை 8 மணி அளவிலான தகவல்களின் படி)

2.29 கோடிக்கும் அதிகமான (2,29,36,394) தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் பயன்படுத்தப்படாமல் இன்னும் உள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்