மக்கள் ஆரோக்கிய திட்டம்; தமிழகத்தில் கோவிட் சிகிச்சை பெற்றவர்கள் விவரம் என்ன?

By செய்திப்பிரிவு

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 7,90,272 பெண்களுக்கு கோவிட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் இலவச கோவிட்-19 பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்குவதற்கான ஆதரவை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார ஆணையம் வழங்கி வருகிறது.

2020-21 நிதியாண்டில் கோவிட்-19 சிகிச்சைக்காக மொத்தம் 3,27,672 மருத்துவமனை சேர்க்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டை பொருத்தவரை 7,90,272 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

2020 ஜூலையில் வெளியான இந்திய தலைமை பதிவாளரின் தலைமையிலான மக்கள்தொகை மதிப்பீடுகளுக்கான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின் படி, இந்தியாவில் 2016-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 12,91,074 ஆகவும், 2016-17-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 1.11 ஆகவும் இருந்தது.

தமிழகத்தில் 2018-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 75,342 ஆகவும், 2018-19-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 0.47 ஆகவும் இருந்தது.

2019-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 75,695 ஆகவும், 2019-20-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 0.47 ஆகவும் இருந்தது. 2020-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 76,049 ஆக இருந்தது.

ஆயுஷ்மான் பாரத்தின் ஒரு பகுதியாக, 2020 டிசம்பருக்குள் நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு ஆதரவளித்து வருகிறது.

திரவ மருத்துவ ஆக்சிஜனின் விநியோகம் 2021 பிப்ரவரியில் ஒரு நாளைக்கு 1292 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 2021 ஏப்ரலில் 8593 மெட்ரிக் டன்னாக இது அதிகரித்தது. 2021 மே 28 அன்று, 10,250 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ 5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. 13.44 கோடி குடும்பங்கள் இதன் பயனாளிகளாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்