மாதவிலக்கு மத தீண்டாமையாக கருதப்படுவது ஏன்?- உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் அமைப்பு புதிய மனு

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

இயற்கை உடற்கூறியல் சார்ந்த மாதவிடாய் ஏன் மத தீண்டாமையாக கருதப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹேப்பி டூ பிளீட் (Happy to Bleed) என்ற பிரச்சார குழுவைச் சேர்ந்த மாணவிகள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிரான வழக்கில் இந்த பிரச்சார குழுவைச் சேர்ந்த மாணவிகள் புதிய மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளனர்.

அந்த மனுவில், "இயற்கை உடற்கூறியல் சார்ந்த மாதவிடாய் ஏன் மத தீண்டாமையாக கருதப்படுகிறது. இந்திய அரசியல் சாசனத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகள் இருக்கும்போது நவீன இந்திய சமூகம் பெண்கள் இன்னமும் மாதவிடாய் காரணத்துக்காக ஒதுக்கப்படுவதை ஆதரிக்கிறதா என்பதை உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்த வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

வழக்கில் தலையிடும் வகையில் அவர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு பரிசீலனை செய்து முடிவை அறிவிக்கும்.

இந்த மனு குறித்து மனுதாரர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, "10 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்ற மத ரீதியான பிற்போக்கு சிந்தனையை எப்படி பலரும் ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது. இது அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 14, 15 பெண்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சுதந்திரங்களுக்கு எதிரானது" என்றார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "வேதங்கள், வேதசாரமாகிய உபநிடதங்கள், மற்றும் புனித நூல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகுபாடு கற்பிக்காத நிலையில் எங்கிருந்து வருகிறது இந்தப் பாகுபாடு.

ஆன்மிகம் முழுதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற புலத்தில் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்கள் என்று கூறுகிறீர்களா?

உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா?" என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்