தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதன் ஆலோசனைக்காக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தமிழக ஆம் ஆத்மியினர் சந்தித்து பேசினர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய இன்று தமிழகத்தின் ஆம் ஆத்மி நிர்வாகிகள் டெல்லி வந்திருந்தனர்.
இந்த குழுவில் ஆம் ஆத்மியின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் வசீகரன், மாநில பொருளாளர் ஸ்ரீனிவாசன், இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன் தமிழக மேலிட பொறுப்பாளரும் டெல்லியின் எம் எல் ஏவுமான சோம்நாத் பாரதியும் கலந்து கொண்டார்.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்தமுறை போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago