பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்ட நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலேயே இந்த விவகாரத்தை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
» அதிகரிக்கும் கரோனா; தடமறிதல், தீவிரக் கட்டுப்பாடு: கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரை
» கரோனா பாதிப்புக்கு 13 சித்த மருந்துகள்; ஆய்வு நடைபெறுவதாக மத்திய அரசு தகவல்
தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களவை இன்று காலை கூடியது முதலே அமளி ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மணிநேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அவை மரபுகளை மீறி பதாகைகளை காட்டி அமளியில் ஈடுபடும் எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு எச்சரித்தார்.
இந்தநிலையில் பின்னர் அவை கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பதாகைகளை காட்டியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனையடுத்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டோலோ சென், நாடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா செஹத்ரி, அர்பிதா கோஷ், மவுஸும் நூர் ஆகிய 6 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago